Dr.Regina Papa - உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தவர் - தே.மு.தி.க வேட்பாளர்

Dr. Regina Papa has forty years of experience in higher education. She was Professor and Head of the Department of Women’s Studies at Alagappa University in India and served at Executive Director of the Asian University for Women’s Access Academy. A graduate of the University of Madras (one of India’s oldest universities), she earned a doctorate from Madurai Kamaraj University and went on to establish the first Women’s Studies Department in India at Alagappa, as well as becoming the first woman registrar of a major university in India. Over the course of Dr. Papa’s career, women’s studies and women’s development have served as the primary focus of her work. In addition to teaching courses in gender theory and research, she has run numerous action-oriented research projects, such as a technology centre for rural girls and a free legal aide centre for women.


அறிஞர் பெர்னாட்ஷாவால் ஆரம்பிக்கப்பட்டு லண்டனிலிருந்து வெளிவரும் 'நியூ ஸ்டேட்ஸ்மென்' பத்திரிகை, வருடாவருடம், 'உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தவர்கள்' என பத்துப் பேரைப் பிரகடனப் படுத்தி வருகிறது. 2005-ம் வருடம், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பத்துப் பேரைக் குறிப்பிட்டது அந்தப் பத்திரிகை. அதுபோல இந்த ஆண்டும் 'நியூ ஸ்டேட்ஸ்மென்' தேர்ந்தெடுத்துள்ள பத்துப்பேரில், சிவகங்கையில் ப.சிதம்பரத்தோடு மோதும் தே.மு.தி.க. வேட்பாளரான பர்வத ரெஜினா பாப்பாவும் ஒருவர்.

சிதம்பரத்துக்கு எதிராகப் பிரசாரங்களில் அனல் கக்கி வரும் தே.மு.தி.க-வினர், ரெஜினா பாப்பாவுக்குக் கிடைத்துள்ள இந்த உலகளாவிய அங்கீகாரத்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள். காங்கிரஸ் கூடாரமோ, இதனால் மேலும் கலவர மாகியிருக்கிறது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மகளிர் இயல் துறை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற ரெஜினா பாப்பா, தற்போது பங்களாதேஷிலுள்ள ஆசிய பெண்கள் பல்கலைக்கழகத்துக்கான பன்னாட்டு ஆலோசகராக இருக்கிறார்.

அந்த பல்கலைக்கழகத்தில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த, சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் சுமார் 150 பெண்களை தேடிப் பிடித்து அவர்களுக்கு உயர்கல்வி வழங்கியிருக்கிறார் ரெஜினா. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பற்பல கிராமங்களுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுத்து, பொது சுகாதாரத்தைப் பெருமளவில் மேம்படுத்தியிருக்கிறார். பெண்கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் ரெஜினா பாப்பாவின் கடுமையான பணிகளுக்காகத்தான், 'உலகத்தையே மாற்றுபவர்கள்' பட்டியலில் இவரை சேர்த்திருக்கிறது 'நியூ ஸ்டேட்ஸ்மென்.'

இது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பிரசாரத்தில் இருந்த பர்வத ரெஜினா பாப்பாவை சந்தித்தோம்.

''சிம்னி விளக்கில் படித்துப் பட்டம் வாங்கிய எனக்கு பாமர மக்களின் வலியும் வேதனை யும் நன்றாகத் தெரியும். பல் கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கு கிராமத்தில் போய் பணியாற்றவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், நான் பதவியிலிருந்த காலத்தில் கிராமங்களை நோக்கி ஓடினேன்; அந்த மக்களோடு ஒருத்தியாக வாழ்ந்திருக்கிறேன். இன்றைக்கு ஓட்டுக்காக பலபேர் இலங்கைத் தமிழருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால், இருபது வருடங்களுக்கு முன்பே நாங்கள் அந்த மக்களுக்காக, 'உலகத் தமிழர் பேரவை' என்ற அமைப்பின் மூலமாக நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறோம். சமீபத்தில்கூட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அடித்தட்டுப் பெண்கள் இருபத்தொன்பது பேருக்கு உயர்கல்வி படிப்பதற்காக ஆசிய பெண்கள் பல்கலைக்கழகத்தின் மூலமாக நான் பயிற்சியளித்திருக்கிறேன். இன்றைக்கு நான் ஒரு கட்சியை சேர்ந்தவளாக இருந்தாலும், எனக்கு அனைத்துக் கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், விஜயகாந்த் என்ற தலைவர் கிடைத்திருக்கிறார். இதெல்லாமே இந்த முறை சிதம்பரத்தின் பணநாயக அரசியலுக்கு முடிவு கட்டும். அப்புறம் பாருங்கள்... இந்த சிவகங்கையை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் மாற்றிக் காட்டுகிறேன்!'' சொல்லிக்கொண்டே பிரசார வேனில் ஏறுகிறார் பர்வத ரெஜினா பாப்பா.

(நன்றி - விகடன்)

மேலும் இவரை பற்றிய விவரங்கள்

Book - Women, entrepreneurship and technology by B Regina Papa (Author) 

http://www.asianwindow.com/education/the-woman-who-could-change-the-world/

http://www.newstatesman.com/asia/2009/01/women-papa-india-auw

http://www.asian-university.org/documents/AccessAcademybrochure.pdf

எனக்கு இவங்க மேல நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா எதாவது பண்ணுவாங்க !

வாழ்த்துக்கள் ரெஜினா பாப்பா அவர்களே !!

4 comments:

Joe said...

சிதம்பரம் ஒரு நல்ல மனிதர் தான்.
ஆனால் அவரது தொகுதிக்காக எந்த நல்ல காரியமும் செய்யவில்லை என்று தான் செய்திகள் வருகின்றன.

வாழ்த்துக்கள் ரெஜினா பாப்பா அவர்களே!
நீங்கள் வெற்றி பெற்றி அந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்யுங்கள்!

Raju said...

வாழ்த்துக்கள் ரெஜினா பாப்பா அவர்களே!
உங்களுக்கும்தான் சுட்டிகுரங்கு...!

சுட்டி குரங்கு said...

ஆமாம் Joe,அவரும் நல்லவரு தான்,
ஆனா என்ன அவர் இந்த ஹோம் மினிச்டெர் ஆனதுக்கு அப்புறம் ரொம்ப இத்தாலிய காங்கிரஸ் ஜால்ரா ஆகிட்டார்.

சுட்டி குரங்கு said...

ரொம்ப தேங்க்ஸ் டக்ளஸ்