நான் பொய் சொல்ல விரும்பவில்லை அப்படிங்கற தலைப்புல குமுதம் ரிப்போர்ட்டர் ள்ள ஒரு கொடுமைய படிச்சேன். அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்த்துக்கும், நம்ப சீவலபேரி பாண்டி புகழ் நெப்போலியன்க்கும் பெரம்பலூர் தொகுதிமேல நாலு கண்ணு (ஆளுக்கு இரண்டு கண்ணுள்ள ;)) !! நீங்க சீட் கிடைக்காம கொஞ்சம் புகையிர மாதிரி இருக்கே அப்படின்னு ராமஜெயம் அவர்களிடம் கேட்டதுக்கு இப்படி ஒரு பதில்..
//
தி.மு.க. தலைமை ஒரு சக்கரவர்த்தி மாதிரி. நாமெல்லாம் குறுநில மன்னர்கள் மாதிரி.
//
அது சரி, தலைப்பே "நான் பொய் சொல்ல விரும்பவில்லை"தானே..அது தான் வெளிபடையா சொல்லிட்டாரு.
//
சக்கரவர்த்தி சொல்வதை நாம் கேட்கவில்லை என்றால் நமக்குக் கீழே இருக்கும் மக்கள் எப்படி நாம் சொல்வதைக் கேட்பார்கள்?
//
அட பாவிகளா, மக்களாட்சி அப்டினா மக்களால தேர்தெடுக்க பட்ட தலைவர்கள் மக்களக்கு சேவை செய்றதுன்னு நான் நினச்சு கிட்டு இருந்தேன். அது சரி, அவர் தான் நாங்க எல்லாம் ராஜா மாதிரி , மக்கள்(தொண்டர்கள்) எல்லாம் அடிமைகள் மாதிரின்னு சொல்லிட்டாரே..
சரி, வந்தது வந்துடிங்க இந்த பாட்டை பாத்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகோங்க !!!
தமிழ்நாட்டின் சக்கரவர்த்தியும், குறுநில மன்னர்களும்
Posted by சுட்டி குரங்கு at 03:14
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அண்ணே...
நான் ஒரு கடை திறந்து இருக்கேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு வேண்டுகிறேன்.
கண்டிப்பா கடை பக்கம் வரேன் !!
நிதானம் ஊண்டா?
அடப்பாவி!
@ttpian
//
நிதானம் ஊண்டா?
அடப்பாவி!//
புரியலைங்கோ :(
Post a Comment