Monday,18May
1 comments

பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார் : பழ.நெடுமாறன்

பிரபாகரன் ஆரோக்கியமாக இருக்கிறார் : பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியை முழுமையாக மறுத்திருக்கிறார், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக, இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தினரைப் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... பிரபாகரன் ஆரோக்கியமாகவே இருக்கிறார்.

தற்போது, இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு, சர்வதேச சமுதாயம் முழுவீச்சில் இலங்கை அரசை வலியுறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தச் சூழலில், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்களைப் பரப்பி, சர்வதேச சமுதாயத்தின் பார்வையை திசைத் திருப்பவே இலங்கை அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தமிழ் மக்களும், சர்வதேச சமூகமும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார் பழ.நெடுமாறன்.
 
Source : Vikatan

Wednesday,6May
1 comments

இன்று இரு தகவல்கள் (தேர்தல்)


செய்தி 1 :
இடம் : மதுரை
DMK (அண்ணன் அழகிரி) ஒரு ஓட்டுக்கு 500Rs கொடுத்து இருக்காங்க.

செய்தி 2 :
இடம் : திருச்சி
DMDK (விஜயகாந்த் கட்சி விஜயகுமார்) மட்டும் தான் இது வரை வீட்டுக்கு வந்து வோட்டு கேட்டு இருக்காங்க (வோட்டு மட்டும் தான்)